கடவுள் சக்திக்கு மிஞ்சிய சக்தி உலகில் இல்லை எனலாம். கடவுள் இல்லை இல்லை என சொல்பவர்களுக்கு கடவுள் தான் இருக்கிறேன் இருக்கிறேன் என ஏதாவது ஒரு வடிவில் காண்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
ஆனால் அது பலருக்கு புரிவதில்லை.
பெங்களூரு சிவகங்கா என்னும் கிராமத்தில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் இன்று நடைபெறுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் சிவகங்கா என்கிற கிராமம் உள்ளது.
அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் குகையில் லிங்க ரூபத்தில் வீற்றிருக்கிறார்
ஐந்து அடி உயரத்தில் கம்பீரமான சிவலிங்கமாக காட்சி தருகிறார். இத்தல இறைவனை அருகில் இருந்து பார்த்து தரிசனம் செய்யலாம். இறைவனின் பெயர் ‘கவிகங்காதீஸ்வரர்’ என்பதாகும். இந்தக் கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள்.
அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார். அப்படி திருப்பித் தரும் அந்த நெய், வெண்ணெயாக மாறி இருக்குமாம்.
இது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது.