நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் அதிகம் அரசியல் கருத்துக்களை விமர்சனம் செய்து வருபவர் ஆவார். டிவிக்களிலும், சமூக வலைதளங்களிலும் இவர் விமர்சனங்களை செய்து வருகிறார்..
தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் ரீதியான கருத்துக்களை இவர் எழுதும்போது சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள், அரசியல் தலைவர்களின் தொண்டர்கள் கஸ்தூரியிடம் எதிர்வினையாற்றுவது வழக்கம்.
இதற்கு முன் நடிகர் அஜீத் ரசிகர்கள், திமுக உடன் பிறப்புகள் பல பேர் கஸ்தூரியின் கருத்துக்கு எதிர்வினையாற்றி உள்ளனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி கமல் பாடிய விக்ரம் பாடலில் ஒன்றிய அரசை குறை சொல்வது போல வரிகள் வருவதை, வானதி சீனிவாசனிடம் தோற்றதை லிரிக்ஸ்ல எழுதிட்டாப்ல என சொல்லி இருந்தார். இதற்கு கமல் ரசிகர்கள் சிலரிடம் இருந்து நாகரீகமாக எதிர்வினை வந்ததாம்.
என் முந்தைய டுவீட்டுக்கு கமல் ரசிகர்களும் கட்சியினரும் எதிர்வினையை நாகரீகமாக ஆற்றி வருகிறார்கள். Thx & respect. மத்தியை மட்டுமில்லை, மாநிலத்தை ஆளும் கட்சியை யும் குத்தி காட்டியுள்ளார் என்கிறார்கள். மய்யத்தினர் அப்படி கருதினால் மறுபேச்சு சொல்ல நான் யார்?
ஆனால் எனக்கென்னவோ விக்ரம் விற்க விமர்சனங்களை விலக்கியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எப்படி பார்த்தாலும் அடுத்த 4 ஆண்டுகள் திமுக நிழல் படாமல் தமிழகத்தில் சினிமாத்தொழில் செய்ய முடியாது. All stars have to submit to the Sun and a Red Giant. என கஸ்தூரி சொல்லி இருக்கிறார்.