நடிகை கஸ்தூரி சில வருடங்களாக சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஆவார். சமூக நிகழ்வுகள் எல்லாவற்றையும் அலசுவார் இவர். இது எப்படி தொடர்ந்து உங்களுக்கு சாத்தியப்படுகிறது என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார் அவரிடம் ரசிகர் கேட்ட கேள்வியும் கஸ்தூரி சொன்ன பதிலும் இதோ.
எந்த நேரத்திலும் கிரிக்கெட், அரசியல், சினிமா போன்ற சமூக சிந்தனையோடு எப்படி செயல்பட முடிகிறது? அதுவும் ஒரு பெண்ணாக இருந்து சாதிப்பது எப்படி?
கவர்ச்சியான தோற்றத்துக்கும் கருத்தான சிந்தனைக்கும் ஒத்து வராது என்ற பார்வையை மாற்றுவது என் குறிக்கோள்களில் ஒன்று. Beauty with Brains என்பதை நம்மூர் ஆண்கள் ஏற்று கொள்ள பழகவேண்டும்.
அதே போல், ஆண்களை விட பெண்களுக்கு வேகம் குறைவு, விவேகம் அதிகம். குற்றம் இழைக்க தயங்குவார்கள். என்னால் முடிந்த அளவு நானும் என் சமூக ஆர்வத்தை , பெண்ணியத்தை பேசுகிறேன். என கஸ்தூரி கூறியுள்ளார்.