Published
10 months agoon
தமிழில் தாம் தூம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் கங்கணா ரணாவத். இவர் பேசினால் எழுதினால் அது பெரிய சர்ச்சைக்குரிய விசயமாக பார்க்கப்படும்.
பாரதிய ஜனதாவை சேர்ந்த இவர் தற்போது காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சமீப காலமாக காஷ்மீரில் வரலாறு காணாத வன்முறை அரங்கேறி வருகிறது.
கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதில் பலியானவர்கள் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்றும், இஸ்லாமியர் அல்லாதோர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்றும் தங்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என காஷ்மீர் பண்டிட்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இந்த விவகாரம் குறித்த விசாரணையினை முடுக்கி விட்டுள்ளார். இதற்காக பாதுகாப்பு படையினர் துரிதப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ந்து வரும் படுகொலஒ தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “காஷ்மீர் பண்டிட்களை நாம் காக்க வேண்டும்” என்று அவர் குரல் கொடுத்துள்ளார்.