Entertainment
காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து ஹெச்.ராஜாவின் விமர்சனம்
விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படம் கடந்த 11ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கேர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய காஷ்மீர் மாநிலத்தின் வரலாற்றை மையமாக கொண்டு வந்திருக்கும் இப்படம் பற்றி
தமிழக பாரதிய ஜனதாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா கூறியிருப்பதாவது
காஷ்மீர் ஃபைல்ஸ் என்கிற இந்தி படம் பார்த்தேன். இது சினிமா அல்ல, ஆவணம்,சரித்திரம் என்றே கூற வேண்டும். 1990ல் ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான கொலை வன்முறை 500000 க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரை விட்டு விரட்டியடிக்கப்பட்டது ஆகியவை தத்ரூபமாக காணமுடிகிறது என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
