cinema news
காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு சிங்கப்பூரில் தடையா?
விவேக் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி வெளியான திரைப்படம் காஷ்மீர் பைல்ஸ். இப்படத்திற்கு பலரும் அதிக விளம்பரம் செய்தனர்.
குறிப்பாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் காவிகள் சம்பந்தப்பட்ட கட்சிகள் இந்த படத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை பார்க்க சமூக வலைதளங்களில் வலியுறுத்தியது.
பாரதிய ஜனதாவின் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இப்படத்தை பார்க்க வலியுறுத்திய நிலையில் இப்படம் அதிக வசூலையும் ஈட்டியது.
இந்த படம் ஒரு காலத்தில் காஷ்மீரில் ஏற்பட்ட பிரிவினையையும் அதன் வரலாற்றையும் கொண்டு எடுக்கப்பட்டது என்பதாலும் கதையின் ஓட்டம் பிடித்திருந்ததாலும் படம் பேசப்பட்டது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சமூக நல்லிணக்கத்தை இப்படம் சீகுலைப்பதாக இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.