காஷ்மீரில் பல வருடங்களாக வன்முறை மட்டுமே பிரதானமாக உள்ளது. வன்முறை என்றாலே காஷ்மீர் என்றாகி விட்டது. அழகான ஆப்பிள் விளையும் நகரமான காஷ்மீர் வன்முறைக்கு முழுவதும் வித்தாகி விட்டது.
கடந்த இரண்டு வருடங்களாக பாஜக அரசு எடுத்த பல முயற்சிகளுக்கு பின் தான் அங்கே பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இருப்பினும் பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் பல அடிப்படைவாத அமைப்புகள் காஷ்மீரில் இருந்து கொண்டு ஏதாவது வன்முறைகளை செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
காஷ்மீரில் நேற்று மாலை ஒய்.கே போரா என்ற இடத்தில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் .மூவரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களாவர் உமர் ரஷீத் பெய்க், உமர் ரம்ஜான்,பிடா ஹுசேன் யாது என்ற பாஜக நிர்வாகிகள் காரில் சென்று கொண்டிருந்தபோது தி ப்ரசிடெண்ட் ப்ரெண்ட் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த வெறிச்செயலை செய்துள்ளனர்.