Entertainment
கருப்பட்டிக்கு புகழ்பெற்ற வேம்பார்
உணவில் பொதுவாக சேர்க்கப்படுவது சீனியானது அவ்வளவு உகந்த பொருள் அல்ல. அது உடல்நலத்தை பாதிக்க கூடியது என்று பொதுவாக எல்லோராலும் சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் சீனி சேர்த்துக்கொள்வதை விட வெல்லம், கருப்பட்டி போன்றவைகளை சேர்த்துக்கொண்டால் இன்னும் உடலுக்கு நலமும் பலமும் கூடும்.
கருப்பட்டி என்பது பனையில் இருந்து கிடைக்கும் பதனீரில் இருந்து காய்ச்சப்படுவது ஆகும்.
சுத்தமான பதனீரில் இருந்து கருப்பட்டி காய்ச்சப்பட்டு கருப்பட்டி எடுக்கப்படுகிறது.
இந்த கருப்பட்டி பல்வேறு இடங்களில் கிடைத்தாலும் போலிகள் அதிகம் உள்ளன. சர்க்கரைபாகு கலந்து இன்னும் போலித்தனங்கள் செய்து கருப்பட்டி விற்கப்படுகிறது.
அப்படி எதுவும் இல்லாமல் சுத்தமான கருப்பட்டியாக வாங்க வேண்டும் என்றால் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் செல்ல வேண்டும். இங்குதான் கருப்பட்டி மிகவும் பிரசித்தமாகும்.
இங்கு சுவையான அசல் கருப்பட்டி கிடைக்கிறது. இந்த ஊரில் பல கருப்பட்டி வியாபாரிகள் உள்ளார்கள். இவர்களிடம் சென்று நமக்கு தேவையான சுத்தமான கருப்பட்டியை வாங்கிக்கொள்ளலாம்.
தூத்துக்குடியில் இருந்து இராமேஸ்வரம் சாலையில் 35 கிமீ தொலைவில் வேம்பார் உள்ளது.