கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வடிவேலுவின் காமெடி அனைவரும் அறிந்ததே.இந்த படத்தில் இவர் டோக்கன் வசூலிப்பவராக அடாவடி காமெடி செய்வார்.
சாலையில் சும்மா நிற்கும் வாகனங்களுக்கு எல்லாம் அவர் டோக்கன் வசூலிப்பவராக நடித்திருப்பார்.
இந்த நிலையில் இதே போன்று ஒரு சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது. தஞ்சை பெரிய கோவில் அருகே நின்றிருந்த வாகனங்களுக்கு எல்லாம் ஒருவர் டோக்கன் வசூலிக்கிறேன் என மோசடி செய்துள்ளார்.
ஆட்டோ டிரைவர் பொன்னி என்பவர் இந்த செயலை செய்துள்ளார்.
கருப்பசாமி குத்தகைதாரர்' பட பாணியில் வாகனங்களுக்கு டோக்கன் வசூலித்த ஆட்டோ ஓட்டுநர்#Thanjavur #Forgery #Token pic.twitter.com/qwx1r4Eb4S
— Thanthi TV (@ThanthiTV) December 20, 2021