அம்பேத்கர் சிலை உடைப்பு தொடர்பாக இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காவல் நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையின் தலை உடைக்கப்பட்டது. இதனால், அங்கு பதட்டம் நிலவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் கரு. பழனியப்பன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தலைவர்கள் சிலையின் தலை உடைக்கப்படும் பொழுது தான், இந்த அம்பேத்கரும், பெரியாரும் , சமூக முன்னேற்றம் குறித்து சிந்தித்ததில் பெரிய தலைகள் என்பது இளைய தலைமுறைக்கு புரிகிறது!’ என பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.