வருடம் முழுவதும் ஐயப்பனுக்குரிய விரதம் கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் மகர ஜோதி தரிசனம் வரை விசேச காலமாகும். கார்த்திகை 1ம் தேதி தொடங்கி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் கடும் விரதம் இருந்து, புலால் வெறுத்து, இல்லறம் வெறுத்து, அதிகாலையில் குளித்து ஐயப்பனுக்கு விரதம் இருந்து பூஜை செய்து 48 நாட்கள் கடும் விரதம் இருந்து அய்யப்பன் கோவில் செல்வார்கள்.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் சபரிமலை உள்ளது. பல அளப்பறிய சக்திகளை கொண்டதாக இம்மலை உள்ளது. ஐயப்பன் பலரது பிணிகள், வேதனைகளை தீர்த்து நல்வாழ்க்கை அளிக்கும் கலியுக கடவுள் என்பதால் இக்கோவிலுக்கு மாலை அணிந்து கடும் விரதம் இருந்து இந்தியா முழுவதும் பக்தர்கள் வருவார்கள்.
இந்த வருடம் கொரோனா பிரச்சினை தலை தூக்கி இருப்பதால் அரசு என்ன செய்யப்போகிறது என தெரியவில்லை என பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில மாதங்களில் அய்யப்பன் விரதம் தொடங்கப்படும் நிலையில் உள்ளது.
ஏற்கனவே ஆண்டாண்டு காலமாக நடந்து வந்த பல பெரிய விழாக்களை அரசு சாதாரணமாக தடை செய்தது. இந்த வருடம் ஐயப்பன் கோவிலுக்கு கட்டுப்பாடுகளுடன் வர அனுமதிக்கப்படுமா அல்லது தடை எதுவும் விதிக்கப்படுமா என அய்யப்பனின் தீவிர பக்தர்கள் கவலையில் உள்ளனர்.
எதற்கும் அந்த ஐய்யப்பன் தான் அருள் புரிய வேண்டும்.