கார்த்திகை விழாவை குமாராலய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இருள் அகற்றி மனதுக்கு மகிழ்ச்சியும் இல்லம் முழுவது மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்பட ஒளி ஏற்றி வழிபடும் ஒரு நாள்தான் கார்த்திகை திருநாள்.
இறைவன் ஜோதிவடிவானவன் என்பதை உணர்த்தவே திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது . அப்படிப்பட்ட இறைக்கு சமமான ஜோதியை வீட்டில் ஏற்றி வீட்டில் புது ஒளி பாய்ச்சி தரித்திரம், பிணி, இல்லாமை போன்ற பிரச்சினைகளை நீக்கி இன்பமோடு வாழவே கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
முருகனுக்குரிய முக்கிய நாளாகவும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் எனப்படுகிறது.
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று வரும் பெளர்ணமி நாளே கார்த்திகையாகும்.
இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுவோம் இல்லங்களிலும் அனைவர் உள்ளங்களிலும் புது ஒளி ஒளிரட்டும்.

