Entertainment
மதுரையில் கலக்கும் கார்த்தி
நடிகர் கார்த்தி முத்தையா இயக்கும் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது மதுரையை சுற்றி நடந்து வருகிறது.
ஏற்கனவே கார்த்தில் நடிப்பில் முத்தையா இயக்கிய கொம்பன் படமும் இப்பகுதி மக்களை சார்ந்த கதையாகவே வெளிவந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மதுரையை சுற்றி வெகு வேகமாக நடந்து வருகிறது.
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மதுரையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி மகிழ்ந்து வருகிறார் படத்தின் நாயகன் கார்த்தி.
மதுரையில் #விருமன் ஷூட்டிங்கில் இருக்கும் நடிகர் கார்த்தி , நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது ரசிக மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் . இன்றும் சந்திப்பு நடந்தது. @Karthi_Offl #kartthifans pic.twitter.com/Aqcc0W5Q7d
— FridayCinema (@FridayCinemaOrg) November 19, 2021
