cinema news
அண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்
நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை என்ற அறக்கட்டளை மூலம் ஆதரவற்றோர் பலரை படிக்க வைத்து வருகிறார் . இந்த அறக்கட்டளை மூலம் 2012ல் படித்தவர் கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஆவார். இவர் 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த நேரத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டார் இதை அறிந்த சூர்யா தனது அகரம் அறக்கட்டளையில் படிக்க வைத்தார்.
பின், அகரம் அறக்கட்டளை மூலம் சென்னையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியிலும் பொறியியல் படிக்க வைத்துள்ளார்.
தற்போது அந்தப் பெண், தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையிலேயே பணியாற்றுகிறார். அந்த மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு விழா நடந்தது அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யாவின் சகோதரர் கார்த்தி பங்கேற்றார். அவரை பார்த்ததும் ஓடிச் சென்று கார்த்தியை வரவேற்ற அந்த பெண், தான் அகரம் மூலம் படித்து இந்த நிலையில் இருப்பதைக் கூறியுள்ளார்.