கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா வைரஸின் புதிய வடிவமாக உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனால் இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

மும்பையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு வரும் 5ம் தேதி வரை அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவிலும் இன்று முதல் வரும் 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பை முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ளார்.