Latest News
கர்நாடக மாநில மாணவர் நவீன் உடலை கொண்டு வர பிரதமர் உத்தரவு
கர்நாடகாவின் ஹாவேரியை சேர்ந்த நவீன் (22) உக்ரைனின் கார்கிவ் நகரில் மருத்துவம் பயின்று வந்தார். கடந்த 1-ம் தேதி கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், உயிரிழந்த மாணவர் நவீன் குறித்து பிரதமர் விசாரித்தார். எப்படியாவது அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வெளியுறவு துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.