Latest News
கர்நாடக ஹிஜாப் விவகாரம்- கமல்ஹாசன் கலக்கம்
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பாகவும் காவி உடை அணிவது தொடர்பாகவும் ஏற்பட்ட பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது.
கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
என கமல் சற்றுமுன் டுவிட் செய்துள்ளார்.