கர்நாடகாவை உலுக்கிய பெரும் சோக விபத்து

31

கர்நாடக மாநிலம் தவனகரெயில் உள்ள செயிண்ட் பவுல்ஸ் பள்ளியில் படித்த டாக்டர் வீணா, மற்றும் பிரீத்தி ரவிக்குமார் இவர்களுடன் சேர்த்த 12 தோழிகளும் வருடா வருடம் சந்தித்து கொள்வர்.

சந்தித்து கொள்பவர்கள் எங்காவது டூர் ப்ளான் பண்ணி செல்வார்கள் அந்த வகையில் இந்த வருட பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நேற்று முன் தினம் கோவாவுக்கு செல்லலாம் என முடிவெடுத்து இவர்கள் டெம்போ டிராவலரில் சென்றபோது , ஒரு இடத்தில் எதிரே வந்த வந்த டிப்பர் லாரி நிலை தடுமாறி எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு எதிரே வந்த வேனில் மோதியதில் தோழிகள் 12 பேரும் துடி துடிக்க உயிரிழந்தனர்.

கோவா கிளம்புவதற்கு முன் அனைவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர்.விபத்தில் இறந்த ப்ரீத்தி ரவிக்குமார் என்பவர் முன்னாள் பிஜேபி எம்.எல்.ஏ ஒருவரின் மருமகள் ஆவார்.

இந்த விபத்து கர்நாடாகவையே உலுக்கியுள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இந்த கோர விபத்துக்கு வருத்தமும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

பாருங்க:  திருப்பூரில் உருவாக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கம் – குவியும் பாராட்டுகள்!