Entertainment
காரைக்குடி சென்டிமெண்டை விடாத ஹரி
இயக்குனர் ஹரியின் படங்களில் காரைக்குடி சம்பந்தப்பட்ட காட்சி ஒரு இடத்திலாவது வந்து விடும். இயக்குனர் ஹரி காரைக்குடி, தேவகோட்டை, கோட்டையூர், கானாடு காத்தான், என செட்டிநாடு என சொல்லக்கூடிய இப்பகுதிகளில் ஒரு ஷாட் ஆவது வைத்தால்தான் அவருக்கு திருப்தியாக இருக்கும்.
எல்லா படங்களிலும் காரைக்குடி சம்பந்தப்பட்ட இடத்தில் ஷூட்டிங் வைத்து விடுவார், முழுக்க முழுக்க கோவையை கதைக்களமாக மையமாக கொண்டு இவர் இயக்கிய அருள் படம் கூட முழுக்க முழுக்க கோவையிலேயே எடுக்கப்படமால் காரைக்குடியிலேயே எடுக்கப்பட்டது.
சாமி, பூஜை, தாமிரபரணி, வேங்கை என காரைக்குடி பகுதிகளில் இவரது படப்பிடிப்பு அனைத்தும் இருக்கும். காரைக்குடி ஹரியின் வெற்றி சென் டி மெண்ட் பகுதியாகும்.
சமீபத்தில் அருண் விஜய்யின் 33வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் இப்படம் படமாகி வருகிறது.
