cinema news
ஒரு வழியாய் ரிலீஸ் ஆக இருக்கிறது கன்னி ராசி
விமல் நடிப்பில் படம் வந்து வருடங்கள் பல ஆச்சு. கடைசியாக வந்த ஒன்றிரண்டு படங்களும் பெரிய அளவில் போகவில்லை. விமல் படத்தில் நடிக்கிறாரா இல்லையா அவர் படம் வருமா வராதா என கேட்டால் அவர் நடித்த கன்னி ராசி என்ற படம் வரவே இல்லை என ரசிகர்கள் கேட்கும் கேள்வியாகும்.
படம் எடுத்து பல நாட்கள் ஆன நிலையில் இப்படத்தின் இயக்குனர் முத்துக்குமரனும் யோகிபாபுவை வைத்து தர்மப்பிரபு என்ற படத்தை இயக்கி அந்த படமும் ரிலீஸ் ஆகி பல நாட்கள் ஆன நிலையில்
ஒருவழியாய் வரும் நவம்பர்27ல் படம் வருகிறதாம். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.