cinema news
டி சர்ட் மூலம் ஹிந்தி எதிர்ப்பு- கன்னடத்தில் துவங்கி வைத்த பிரகாஷ்ராஜ்
சில நாட்கள் முன் யுவன், சாந்தனு உள்ளிட்ட திரையுலகினர் ஐயாம் எ தமிழ் பேசும் தமிழன், ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட் அணிந்து காட்சி கொடுத்தது, சமூக வலைதளங்களில் கடும் வைரலானது.
திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பும் இந்த விசயத்திற்கு இருந்தது. இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் இந்த ஒரு விஷயத்திற்காக கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் மோதி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலேயே இப்பிரச்சினை ஓயாத நிலையில் பெங்களூரிலும் இது போல டிசர்ட் கலாச்சாரத்தை நடிகர் பிரகாஷ்ராஜ் துவக்கி வைத்துள்ளார்.
ஏற்கனவே மத்திய பாஜக அரசை பல வகையிலும் கடுமையாக எதிர்த்து வருபவர் பிரகாஷ்ராஜ் என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்போது தமிழ்நாட்டை போலவே கன்னடம் பேசும் இந்தியன் ஹிந்தி தெரியாது போடா என்று கன்னடத்தில் எழுதியதை டி சர்ட்டாக அணிந்துள்ளார் இதை தொடர்ந்து சக நடிகர்களான தனஞ்ஜெய், மற்றும் சிவராஜ்குமாரும் இது போல டி சர்ட் அணிந்து ஹிந்திக்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கி உள்ளனர்