கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் தமிழில் ரீமேக்

கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் தமிழில் ரீமேக்

2020ம் வருட துவக்கத்தில் கன்னட மொழியில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் தியா.கே.எஸ் அசோகா என்ற இயக்குனர் இப்படத்தை இயக்கி இருந்தார். கன்னடத்தில் நல்ல வசூலை வாரிக்குவித்த படமிது.

 

அஜ்னீஷ் லோக்நாத் இசையும் படத்துக்கு வலு சேர்த்தது. இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுவதாக தொடர் செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இருந்தாலும் பட தயாரிப்பாளர் கிருஷ்ண சைதன்யா ‘தியா’ படத்தின் ரீமேக் உரிமையை பல்வேறு மொழிகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள் கேட்டு வருவதாகவும், அது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லையென்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக்க உரிமம் பெற்று விட்டதாக தெரிகிறது. கலையரசன் நடித்த குதிரைவால் பட இயக்குனர்  மனோஜ் லியோனல் ஜாசன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அருமையான காதல் கதை இது.

கன்னடத்தில் பிருத்வி அம்பார், குஷி, தீக்‌ஷித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழில் யார் நடிக்கிறார் என தெரியவில்லை.