தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகிறது.
பெற்ற மகளை கேலி செய்த நபர்களை தட்டிக்கேட்ட தந்தைகள் கூட வேடசந்தூர் மற்றும் தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்டனர்.
சிறு குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் கஞ்சா உட்கொண்ட நபர்களால் கடும் துன்பத்துக்குள்ளாகின்றனர்.
பள்ளி மாணவர்களும் கடும் கஞ்சா போதையில் ஆசிரியர்களை மிரட்டும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆபரேஷன் 2.0 என்ற திட்டத்தில் பல கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட இருக்கின்றனர்.
கைதாகும் கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய அதிரடியாக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.