நடிகை கங்கணா ரணாவத் அதிகமான சர்ச்சை கருத்துக்களை கூறி பொதுவாக மாட்டிகொள்பவர். ரொம்ப ஓவரா பேசுறிங்க என்று சொல்லி இவரது டுவிட்டர் கணக்கே முடக்கப்பட்டுவிட்டது.
தற்போது பாரதிய ஜனதா தொடர்பாளராக இருந்த நுபுர்சர்மா நீக்கப்பட்டுள்ளார். டிவி விவாதத்தில் இஸ்லாமியர்கள் பெரிதும் மதிக்கும் முகமது நபியை பற்றி இழிவாக சொன்னதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் உலகத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிராக பேசின.
இதனால் அது இந்தியாவின் கருத்து அல்ல தனிப்பட்ட ஒருவரின் கருத்து என காரணம் கூறி, மேலும் அது போல பேசியவர் பாரதிய ஜனதா அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்று வெளிநாடுகளின் அவதூறுக்கு மறுப்பு தெரிவித்தது இந்தியா.
இந்நிலையில் இது போல பேசிய நவீன் ஜிண்டால், நுபுர்சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கங்கணா ரணாவத். நூபுர் சர்மா அவர் கருத்துகளை சொல்ல உரிமை இருக்கிறது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றம் செல்லுங்கள். இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக நாங்கள் அன்றாடம் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். நீங்களும் அதையே செய்யுங்கள் என கங்கணா கூறியுள்ளார்.