கங்கணாவின் பேச்சை புகழ்ந்த ஹெச்.ராஜா

35

நடிகை கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்துள்ளார். பாரதிய ஜனதாவை சேர்ந்த இவர் அதிரடியான கருத்துக்களை சொல்பவர் அதனால் மீடியா வெளிச்சத்திலேயே அதிகம் இருக்கிறார்.

 

சமீபத்தில் கூட சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிவசேனா கட்சியை எதிர்த்து பேசினார். மும்பைக்குள் அவர் வர முடியாது என மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஒய் ப்ளஸ் பாதுகாப்புடன் அவர் மும்பைக்கு வந்து சென்றார்.

இந்நிலையில் அவர் சில கருத்துக்களை சொல்லியுள்ளார். இந்த நாட்டில் பிரதமர், மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற தேச அமைப்புகளை பயங்கரவாதிகள் என அழைக்க முடிகிறது ஆனால் உண்மையான பயங்கரவாதிகளை அப்படி அழைக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

இதை சுட்டிக்காட்டியுள்ள பாஜகவின் தேசிய செயலர் ஹெச்.ராஜா எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இது என கூறியுள்ளார்.

https://twitter.com/HRajaBJP/status/1305154492413878273?s=20

பாருங்க:  ரஜினி ஒரு மண் குதிரை... பாஜகவின் ஊது குழல் - வெடித்து தள்ளிய நாஞ்சில் சம்பத்