Connect with us

கங்கனா ரணாவத்தின் புதிய சர்ச்சை பேச்சு

Latest News

கங்கனா ரணாவத்தின் புதிய சர்ச்சை பேச்சு

அடிக்கடி ஏதாவது சர்ச்சையாக பேசி வம்பில் மாட்டிக்கொள்பவர் கங்கனா ரணாவத் சில மாதங்களுக்கு முன் சிவசேனா கட்சியை மோசமாக பேசி வம்பில் மாட்டிக்கொண்டார்.

இப்படி பல சர்ச்சைகளில் அடிக்கடி மாட்டிக்கொள்ளும் கங்கணா ரணாவத் இந்தியாவில் 3வது குழந்தை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் வர வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது இந்த கருத்தை கிண்டல் செய்யும் விதமாக காமெடி நடிகை சலோனி கவுர் ‘கங்கனா குடும்பத்திலும் ஒரு சகோதரர், சகோதரி என மூன்று பேர் மொத்தம் உள்ளனர்’ என சுட்டிக்காட்டி பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள கங்கனா ’தாத்தா காலத்தில் பலர் 8 குழந்தைகள் வரை பெற்றுக் கொண்டனர். அப்போது இருந்தது போலவே இப்போதும் வாழ முடியாது மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவை போல கடுமையான சட்டங்கள் தேவை’ என தெரிவித்துள்ளார்.

பாருங்க:  கங்கணா ரணாவத் நடிக்கும் தாகட் டீசர்

More in Latest News

To Top