கங்கனா பாராட்டிய ஏ.எல் விஜய்

கங்கனா பாராட்டிய ஏ.எல் விஜய்

தமிழில் தாம் தூம் என்ற ஒரு படத்தில் கடந்த 12 வருடங்களுக்கு முன் நடித்தவர் கங்கனா ரணாவத். அப்படத்தில் இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக தன்னை முன் நிறுத்தி வருகிறார். சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக . மஹாராஷ்டிராவை ஆளும் சிவசேனா அரசை கடுமையாக விமர்சித்து வரும் இவர் அது தொடர்பான சர்ச்சைகளில் பிரச்சினைகளிலும் பத்திரிக்கை செய்திகளில் அதிகம் வலம் வருகிறார்.

இவர் தமிழில் தலைவா, கிரீடம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஏ.எல் விஜய்யின் இயக்கத்தில் தலைவி என்ற படத்தில் நடிக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான இப்படத்தில் கங்கனா ரணாவத் ஜெ கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

இவர் டுவிட்டரில் தனது இயக்குனர் ஏ.எல் விஜயை மனமார பாராட்டியுள்ளார்.

குட் மார்னிங் நண்பர்களே, இவை நேற்றைய அதிகாலை காட்சி விவாதத்திலிருந்து எனது முற்றிலும் திறமையான மற்றும் மிகவும் பாசமுள்ள இயக்குனர் ஏ.எல். விஜய் ஜியுடன் சில ஸ்டில்கள், இந்த உலகில் பல அற்புதமான இடங்கள் உள்ளன, ஆனால் எனக்கு மிகவும் இனிமையான மற்றும் ஆறுதலளிக்கும் படத்தின் ஸ்டில்கள் என இதை வெளியிட்டுள்ளார்.