Published
2 years agoon
தமிழில் தாம் தூம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கங்கணா ரணாவத். பாரதிய ஜனதா கட்சியில் தீவிர விசுவாசியான கங்கணா சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வர இருக்கிறது. இந்நிலையில் அனைவரையும் பாதித்து வரும் கொரோனா தொற்றுக்கு கங்கணாவும் இலக்காகியுள்ளார்.
கடந்த சில நாட்களாக கண்களில் லேசான எரிச்சலும், சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தேன். ஹிமாச்சல் செல்வேன் என நினைத்தேன் அதனால் பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியானது. கொரோனாவை தகர்த்தெறிவேன்.
உங்கள் சக்தியை மீறி எதையும் விட வேண்டாம். நீங்கள் பயந்தால், அது உங்களை பயமுறுத்தும், அது சிறிய ப்ளூ போன்றது நமக்கு அதிகப்படியான மன அழுத்தத்தை அது ஏற்படுத்துகிறது என கங்கணா கூறியுள்ளார்.