Published
2 years agoon
அரசியல் ரீதியான கருத்துக்களை அடிக்கடி கூறி சர்ச்சையில் சிக்குபவர் கங்கணா ரணாவத். மஹாராஷ்டிர அரசை விமர்சனம் செய்த உடன் சிவசேனா கட்சியினர் மஹாராஷ்டிராவில் உள்ளே நுழைய முடியாது என எச்சரிக்கை எல்லாம் விடுத்து கங்கணா சிறப்பு பாதுகாப்புடன் வந்தது எல்லாம் வரலாறு.
இப்படி அடிக்கடி அரசியல் கருத்துக்களை பேசி மாட்டிக்கொள்ளும் கங்கணா இப்போது முதன் முறையாக தன்னை தானே புகழ்ந்து சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமான தலைவி படத்தில் கங்கணா ரணாவத் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் புகைப்படங்கள் வேறு சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட கங்கணா உலகில் இந்த அளவு என் அளவுக்கு உருமாற்றத்தை காண்பித்ததில்லை. மெரில் ஸ்ட்ரிக் போல அடுக்கடுக்கான கதாபாத்திர திறமை என்னிடம் உள்ளது என அவர் தன்னைத்தானே புகழ்ந்துள்ளார். இந்த அளவிற்கு கலை திறமையை காட்ட முடியுமா என வெளிப்படையாகவே சவால் விடுக்கிறேன் அப்போது என்னுடைய ஆணவத்தை கைவிடுகிறேன் என கூறியுள்ளார்.