Latest News
கங்கனா மீது கர்நாடக மாநிலம் தும்கூரில் வழக்கு
நடிகை கங்கனா ரணாவத், தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் நடித்த இவர் ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். பாரதிய ஜனதா ஆதரவாளரான இவர் சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை இருப்பதாக மஹாராஷ்டிரா ஆளும் சிவசேனா அரசை விமர்சித்து வருகிறார்.
இதனால் சிவசேனா கட்சியினர் இவருக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மஹாராஷ்டிர அரசை தொடர்ந்து எதிர்த்து வரும் இவரின் பங்களாவின் மேற்புறம் ஒன்று சட்டத்துக்கு மீறி கட்டப்பட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் இடித்தனர்.
இந்நிலையில் பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மசோதாவை தொடர்ந்து ஆதரித்து பேசி வரும் நிலையில்
வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடும் விவசாயிகளை கங்கனா தனது டிவிட்டர் பதிவில் அவமதித்ததாக கூறப்படுகிறது. அதில், ‘உண்மையில் தூங்கினால் விழித்துக்கொள்ளலாம். ஆனால், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. வேளாண் மசோதா குறித்து அறியாதவர்கள் பாசாங்கு செய்கின்றனர்’ என்று, விவசாயிகளை அவமதித்து கடந்த 21ம் தேதி சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் நாயக் என்பவர், கங்கனா மீது நடவடிக்கை எடுக்க கோரி, கர்நாடகா மாநிலம் தும்கூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ‘வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், கங்கனா ரனவத் பதிவுகளை வெளியிட்டுள்ளார். எனவே, அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
