காஞ்சனா ரீமேக் இன்று ரிலீஸ்- அனைவருக்கும் நன்றி தெரிவித்த லாரன்ஸ்

காஞ்சனா ரீமேக் இன்று ரிலீஸ்- அனைவருக்கும் நன்றி தெரிவித்த லாரன்ஸ்

அக்சய்குமார் நடிப்பில் லக்‌ஷ்மி பாம் என்ற திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது இது கடந்த 2011ல்வந்த காஞ்சனா படத்தின் ரீமேக் என்பது ஊரறிந்த உண்மை. அதில் ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இப்படத்தில் அக்சய்குமார் நடிக்கிறார். அக்சய்குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

இப்படத்தில் நடித்து கொடுத்த நடிகர் அக்சய்குமாருக்கு இயக்குனர் லாரன்ஸ் நன்றி கூறியுள்ளார் இது போல டஃப் ரோல்களில் நடிக்க தயங்குவார்கள் ஆனால் அது போல எதுவும் செய்யாமல் நன்றாக நடித்து கொடுத்த அக்சய்குமார் சாருக்கு நன்றி. அக்சய்குமார் சார் சிறந்த மனித நேயம் உள்ளவர் ஆவார்.இந்த படம் சிறந்த மெசேஜை சமூகத்துக்கு சொல்லியுள்ளது.

படத்தின் நாயகி கியாரா அத்வானி, ஒளிப்பதிவாளர் வெற்றி , சிஸ்டர் சபினா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

இன்று இரவு 7 மணிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் லக்‌ஷ்மி ஃபாம் ரிலீஸ் ஆகிறது.