Latest News
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தினருடன் தலைமறைவு
கனடா பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள அனைவரையும் நிர்பந்தித்ததால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும்தான் விமானம், ரயில் மற்றும் கப்பல்களில் பயணம் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தடுப்பூசி சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே உடற்பயிற்சி கூடங்கள், மதுபான விடுதிகள், இரவு விடுதிகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது
இதனால் அமெரிக்கா – கனடா எல்லையை கடக்கும் லாரிகளின் ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தலைமையிலான அரசு அறிவித்தது.
தடுப்பூசி செலுத்தாத ட்ரக் ஓட்டுநர்கள், எல்லையை கடந்த பின்னர் ஒரு வார காலத்திற்கு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த கட்டுப்பாடுகள் ட்ரக் ஓட்டுநர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. அரசின் உத்தரவை கண்டித்து நாடு முழுவதும் ட்ரக் ஓட்டுநர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக பெரிய ட்ரக் வாகனங்கள் தலைநகர் ஒட்டாவாவில் நுழைந்துள்ளன. இதனால், ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தன் குடும்பத்தினருடன் ரகசிய இடத்தில் தலைமறைவாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
