கமலுக்கு கமீலா நாசர் ஆறுதல்

21

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இங்கு மட்டும் அதிமுக கூட்டணியின் பாரதிய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கும், கமலுக்கும் இடையே கடைசி நேரம் வரை கடும் போட்டி இருந்து வந்தது.

காலையில் கமல்ஹாசன் தான் முன்னிலையில் இருந்தார் போக போக வானதி சீனிவாசன் முன்னிலையில் வந்தார்.

ஒரு கட்டத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி வெற்றி பெற்றார்.

கமல்ஹாசன் தோல்வி அடைந்தார். கமல்ஹாசனின் தோல்வி கட்சியினரை கலக்கமடைய செய்துள்ளது.

அவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பலர் கமலுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

கமலின் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர்

விதைகளை தூவிக்கொண்டுதான் வருகிறீர்கள்.. அவைகள் ஆலவிருட்சமாய் வளர்ந்து நிற்கும் … நீங்கள் நீங்களாகவே இருங்கள்.. மக்கள் உங்கள் அருகாமையில்…! என கமலுக்கு ஆறுதல் தெரிவித்து டுவிட்டியுள்ளார்.

பாருங்க:  சூரரை போற்று படத்தின் மேக்கிங் வீடியோ
Previous articleதமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்- ஸ்டாலின் பதவி ஏற்பு தேதி
Next articleநடிகர் சூரி முக ஸ்டாலின் சந்திப்பு