கமலஹாசனின் காட்டமான கேள்வி

34

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல் போட்டி இடுகிறார். சமீபத்தில் அவருக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டதால் ஆபரேஷன் செய்திருந்தார் அதனால் அவருக்கு காலில் வலி ஏற்பட்டது.

சில நாட்கள் ஓய்வு எடுத்த கமல் தற்போது மீண்டும் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.

தமிழகமெங்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள்தான். குடிநீர் இல்லை, பாதாள சாக்கடை பிரச்சனை, குப்பை அள்ளுவதில்லை, நீர்நிலைகள் மாசுபாடு, சாலைகள் மோசம், சுகாதார நிலையங்கள் இல்லை. அரை நூற்றாண்டாகியும் இவற்றைக் கூட சரி செய்யாதவர்கள்,இனி எப்போது செய்வார்கள்? என கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமலின் கேள்வியில் நிறைய நியாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அரை நூற்றாண்டு காலமாக ஆண்டவர்கள் எத்தனையோ தேர்தலை சந்தித்த இரு திராவிட கட்சிகளும் சாதாரணமாக செய்ய வேண்டிய அடிப்படை விசயங்களையே செய்யவில்லை என்பது வருத்தம்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பாருங்க:  தனியாருக்கு செல்லும் ரயில்வே துறை - பாஜக அரசு அதிரடி முடிவு
Previous articleஷகீலாவும் வந்தார் அரசியலுக்கு
Next articleசுல்தான் பட புதிய அப்டேட்