பிக்பாஸ் சாக்ஷியை கமல்ஹாசன் கேள்விகளால் துளைத்தெடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை தற்போது தர்ஷனுக்கும், ஷெரினுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், அது தர்ஷனின் வெற்றியை பாதிக்கும் என வனிதா விஜயகுமார் பேசி வரும் விவகாரமே பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக வனிதாவிடம், ஷெரின் சண்டை போடும் சம்பவமும் ஷெரினுக்கு சேரனும், சாக்ஷியும் ஆறுதல் கூறும் சம்பவம் நடந்தது. அப்போது ‘நம்மை பார்த்து நாய் குரைத்தால் நாம் அழக்கூடாது. நான் வெளியே இருக்கும் மக்களை சொன்னேன்’ என ஷெரினுக்கு சாக்ஷி ஆறுதல் கூறினார். அதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், இன்று நிகழ்ச்சிக்கு வரும் கமல்ஹாசன், சாக்ஷியை வெளியே அழைத்து பேசுகிறார். அப்போது வெளியேயும், ஷெரினிடமும் அவர் பேசியை கூறி அவர மடக்க முயலும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
#Day76 #Promo2 #பிக்பாஸ் இல் இன்று.. .#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/KB8r4KL0w5
— Vijay Television (@vijaytelevision) September 7, 2019