cinema news
பிறந்த நாளில் பிரச்சாரம்… தனி தொலைக்காட்சி சேனல்.. கமல் அதிரடி வியூகம்
மக்கள் நீதி மய்யம் சார்பில் புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்று துவங்கப்படவுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்று அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.எனவே, இனிவரும் தேர்தலை இன்னும் தீவிரமாக சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டு வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரோடு மக்கள் நீதி மய்யம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அவரின் ஆலோசனைப்படி கட்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. புதிய கட்டமைப்புகள் குறித்து விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பேசிய கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் நிர்வாகிகள் உத்வேகம் பெரும் வகையில் பேசினார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நம் பலத்தை நாம் காட்டியுள்ளோம். நமது அடுத்த இலக்கு 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான். அதற்கான முதற்கட்ட பிரச்சனையை நமது தலைவர் கமல்ஹாசன் வருகிற நவம்பர் மாதம் 7ம் தேதி துவங்கவுள்ளார். மேலும், நமது கட்சியின் சார்பில் புதிய தொலைக்காட்சி சேனலை விரைவில் துவங்கப்படும்’ என அவர் தெரிவித்தார்.
அதாவது, கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ம் தேதி வருகிறது. எனவே, அன்றைக்கே சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை கமல்ஹாசன் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.