பிக்பாஸ் தேவையில்லை எனில் அரசும் தேவையில்லை – கமல்ஹாசன் பதிலடி

330
Kamalhaasn comment on election alliance

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் லயோலா கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் அரசியல் விழுப்புணர்வு குறித்து கமல்ஹாசன் பேசியிருந்தார். இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘கமல்ஹாசன் திடீரென வருவார். பின்னார் காணாமல் போய்விடுவார். தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் ஆள்மாறாட்டத்தை கற்றுக்கொடுத்ததே கமல்ஹாசன்தான். கல்லூரி மாணவர்கள் முன்பு அரசியல் பேசுவது தவறு’ என அவர் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கமல்ஹாசன் ‘தமிழக ஆட்சியாளர்களை வியாபாரிகளாகத்தான் நான் பார்க்கிறேன். பிக்பாஸ் சமுதாயத்திற்கு தேவையில்லை எனில் இந்த அரசும் அப்படித்தான்’ எனக் கூறியுள்ளார்.

பாருங்க:  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடையவர்களில் எத்தனை பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது?