யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கிறீர்கள்! கமல்ஹாசன் நறுக் கேள்வி !

யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கிறீர்கள்! கமல்ஹாசன் நறுக் கேள்வி !

தமிழகத்தில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப் படாதது குறித்து தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளன.

ஆனால் தமிழக அரசு இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காமல் மத்திய அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘அண்டை மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கும்போது என் முதல்வர் யாருடைய கட்டளைக்காகவோ காத்திருக்கின்றார். என்னுடைய குரல் மக்கள் சார்பான குரல். உடனே உங்கள் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி ஊரடங்கை நீடித்து உத்தரவிடுங்கள் அண்டை மாநிலங்கள் சில கொரோனா வைரஸ் உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். இது கமிஷன் மற்றும் ஒமிஷன் பெறும் நேரம் அல்ல. மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்.’ எனத் தெரிவித்துள்ளார்.