Tamil Flash News
ஜென்டில்மேன் ஆக வேண்டிய கமல் இந்தி யன் ஆன மர்மம்!…ஷங்கரை மீது நம்பிக்கையில்லையாமே?..
கமல்ஹாசன் – சங்கர் கூட்டணியில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் “இந்தியன்”. இதன் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து வரும் சூழ்நிலையில் படம் ரிலீஸ் தேதி குறித்து பேசப்பட்டு வருகிறது.
“ஜென்டில்மேன்” படம் அதில் நடித்த அர்ஜுனின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வரவற்பு மீண்டும்தமிழ் சினிமாவில் கிடைக்க காரணமாக அமைந்தது. பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த படம் என்பதில் பலருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. அப்படி ஒரு அளவிலான வெற்றியை கொடுத்தவர் ஷங்கர். ஆனால் ஷங்கர் இந்த படத்தில் முதலில் கமல்ஹாசனைத்தான் இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தாராம்.
படத்தின் கதையை கமல்ஹாசனை மனதில் வைத்து தான் சங்கர் கதையை எழுதினாராம். கதையை கமல்ஹாசனிடம் சொல்லிய பொழுது சங்கர் மீது அவருக்கு பெரிய நம்பிக்கை இல்லையாம். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இந்த கதையை வைத்து சங்கர் எடுத்து விடுவாரா? என்கின்ற தயக்கத்திலேயே கமல்ஹாசன் ஷங்கரை தவிர்த்து விட்டாராம் அந்த நேரத்தில்.
பிறகு படம் வெளிவந்து அதற்கு கிடைத்த ரெஸ்பான்சை பார்த்த கமல்ஹாசன், சங்கரை அழைத்து அவருடைய திறமையை குறைத்து மதிப்பீட்டு விட்டோமோ என நினைத்து, அவருடன் இணைவது குறித்து பேசினாராம். அப்படி உருவான படம் தான் “இந்தியன்”.
இப்போது அதன் இரண்டாம் பாகம் எடுத்து கமலுக்கு தன் மீது நம்பிக்கை வரச்செய்துவிட்டார் ஷங்கர். “ஜென்டில்மேன்” படத்தின் வெற்றியும், “இந்தியன்” படத்தின் வெற்றியையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டுமே சமமாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் கமல் நடித்திருந்தால் “ஜென்டில்மேன்” படம் வேறு பரிமாணத்தை பெற்றிருக்கும்.