Tamil Flash News
என்னை கைது செய்தால்? – கமல்ஹாசன் எச்சரிக்கை
தேவையில்லாத பதட்டத்தை தவிர்க்க வேண்டுமெனில் என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே எனக் கூறியதை, அதிமுகவினரும், பாஜகவினரும் கையில் எடுத்து அதை சர்ச்சையாக்கி அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதோடு, தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்நேரத்திலும் கமல்ஹாசன் கைது செய்யப்படலாம் என்கிற பதட்டம் எழுந்தது. இந்நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தி செய்தியாளர்களிடம் கமல் பேசியபோது ‘கோட்சே பற்றிய கருத்தில் தெளிவாக இருக்கிறேன். இது உருவான சர்ச்சை அல்ல.
உருவாக்கப்பட்ட சர்ச்சை. சூலூர் தொகுதியில் என் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டதின் பின்னணியில் அரசியல் இருக்கிறது. பிரதமர் மோடிக்கு சரித்திரம் பதில் சொல்லும். என்னை கைது செய்தால் தேவையில்லாத பதட்டம் உண்டாகும். எனவே, அதை செய்யாமல் இருப்பது நல்லது” என அவர் தெரிவித்தார்.