கோட்சே விவகாரம் – கமல்ஹாசனுக்கு நிபந்தனை ஜாமீன்

217
கமல்ஹாசன் ஜாமீன்

காந்தியை சுட்டுக் கொலை செய்த கோட்சே பற்றி மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பாக தொடர்ந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே எனக் கூறியதை, அதிமுகவினரும், பாஜகவினரும் கையில் எடுத்து அதை சர்ச்சையாக்கி அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதோடு, தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனுக்கு எதிராக மொத்தம் 76 புகார்கள் பதியப்பட்டது. எனவே, எந்நேரத்திலும் கமல்ஹாசன் கைது செய்யப்படலாம் என்கிற பதட்டம் எழுந்துள்ளது.

இதற்கிடையே முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கமல்ஹாசன் தரப்பு மனு அளித்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு பின், 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி 4வது நீதித்துறை நடுவர் மன்றம் முன்பு ஆஜராகி 2 நபர்களின் உத்தரவாதத்துடன் ரூ. 10 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

பாருங்க:  இயக்குனர் அகத்தியன் பெயரில் போலி முகநூல் கணக்கு ஆரம்பித்து மோசடி செய்யும் நபர்