kamal

தம்பிக்கு வாழ்த்துக்கள் – விஜயின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு

பிகில் பட விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்து சரியானதுதான் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamalhaasan comment on vijay talk  – ஜெயஸ்ரீ மரணத்தில் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யாமல் லாரி ஓட்டுனரையும், பேனர் தயாரித்தவரையும் குறை சொல்கிறார்கள் எனக்கூறினார். அதேபோல், யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் எனவும் அவர் அதிரடியாக பேசினார்.

vijay

ஆளும் அதிமுக தரப்பினரையே அவர் கூறியிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். விஜயின் இந்த பேச்சு அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பலரும் எதிர்வினையாற்ற துவங்கிவிட்டனர்.

இந்நிலையில், இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் ‘அவர் கூறியது சரிதான். ஒரு நல்ல மேடையை சரியான காரணத்திற்காக விஜய் பயன்படுத்தியுள்ளார். தம்பிக்கு என் வாழ்த்துக்கள்’ என தெரிவித்தார். மேலும், நாட்டிற்கு பொதுவாக ஒரு மொழி தேவை என்ற ரஜினியின் கருத்து பற்றி கூறிய அவர் ‘பொதுவான மொழி ஏற்கனவே இருக்கிறது. அது ஆங்கிலமொழி. விபத்தாக வந்தாலும் அந்த மொழி பயனுள்ளதாக இருக்கிறது’ என தெரிவித்தார்.