Congres invite kamal to join the alliance - tamilnaduflashnewscom

கமல்ஹாசன் எழுதிய ஊரடங்கு பாடல்! பாடியுள்ள பிரபலங்கள்!

நடிகர் கமல்ஹாசன் ஊரடங்கு சமயத்தில் பாடல் ஒன்றை எழுத அதனை அனிருத், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சித் ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தியாவில் வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், அறிவும் அன்பும் என்ற தலைப்பில் நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள இப்பாடலை, இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் , யுவன் சங்கர் ராஜா, ஆண்டிரியா, சித்தார்த், லிடியன், சித் ஸ்ரீராம் போன்றோர் பாடியுள்ளனர். இந்த பாடல் ஊரடங்கு சமயத்தில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய தனி மனித இடைவெளி உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கும் என சொல்லப்படுகிறது.

இப்படல் வரும் 23 ஆம் தேதி திங்க் மியூசிக் சேனலில் வெளியாக உள்ளது. மனிதர்களிடன் அன்பும் மனித நேயத்தையும் வலியுறுத்தி இப்பாடல் உருவாகியுள்ளது,. மேலும், இப்பாடலுக்கு யாரும் சம்பளம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.