லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த கதையில் இப்போது கமலே நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் திறமையைப் பார்த்து வியந்த கமலஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்தார். விஜய்யை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படத்தை முடித்த பின்னர் அந்த கதைக்கான வேலைகளை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் சிக்கியுள்ள நிலையில் கதையை முடித்து அதை ரஜினியிடம் சொன்ன நிலையில் அந்த கதையில் ரஜினிக்கு முழுமையான திருப்தி இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டு இருந்த லோகேஷிடம் அந்த கதையில் தானே நடிப்பதாக கமல் தெரிவித்துள்ளதாகவும் அதனால் இப்போது கதையில் சில மாற்றங்களை செய்ய லோகேஷ் ஆயத்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.