கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த நாடளுமன்ற தேர்தலில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த சின்னத்தை அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்ட கமல் கட்சியினர் டார்ச் அடித்தும் கமல்ஹாசனின் கட்சியால் புதிய ஒளி பரவுகிறது என்ற அடிப்படையில் அதிக விளம்பரம் மேற்கொண்டனர்.
இந்த முறை கமல்ஹாசனுக்கு டார்ச் ஒதுக்கப்படவில்லை, அதற்கு பதில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் தான் வேண்டும் என கமலின் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ள நிலையில் தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என எம்.ஜிஆர் மக்கள் கட்சி கூறியுள்ளது.