Entertainment
கமல் பாடல் வரிகள் குறித்த கஸ்தூரியின் அதிரடி கருத்து
கமல் நடித்துள்ள விக்ரம் படத்தில் கமல் ஒரு ஓப்பனிங் சாங் ஒன்று பாடியுள்ளார். அந்த பாடல் நேற்று வெளியானது பத்தல பத்தல என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆகியுள்ளது.
இந்த பாடலை எழுதியவர் கமல்ஹாசன். இதில் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே என்ற வரிகள் வருகிறது இந்த வரிகளை கடும் ஆட்சேபகரத்திற்குரிய வரிகளாக பாஜகவினர் பார்க்கின்றனர்.
இந்த நிலையில் இந்த பாடல் வரிகள் குறித்து நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது,
சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல் வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு! என கஸ்தூரி கூறியுள்ளார்.
கோவையில் கமல்ஹாசன் தேர்தலில் நின்று வானதி சீனிவாசனிடம் தோற்ற விசயத்தை தான் இந்த பாடல் வரிகளில் இறக்கி விட்டதாக கஸ்தூரி கூறியுள்ளார்.
