கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் வந்த படங்களில் பெரும்பாலும் சேர்ந்தே நடித்திருப்பர். அப்படியொரு படமாக கடந்த 1979ம் ஆண்டு இதே 8ம் தேதி வெளியான படம் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற படமாகும்.
பாரசீக கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் வெளிவந்தது. இன்றும் நாம் இந்த கதையை புத்தகங்களில் வாசித்திருக்கலாம். அலாவுதீன் பூதம் கேட்டதை எல்லாம் தரும் என சிறுவர்களுக்காக இந்த பூத கதை சொல்லப்பட்டது.
பூதத்தோடு கொஞ்சம் காதலும் கலந்து இப்படத்தில் சொல்லப்பட்டது.இந்த படத்தில் விளக்கை தேய்த்த உடன் வந்து கேட்ட வரம் கொடுக்கும் பூதம் அலாவுதீனாக மறைந்த நடிகர் அசோகன் நடித்திருந்தார்.
கமல் கதாநாயகனாகவும் ரஜினி வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த படம் இன்றுடன் 43வது வருடத்தை எட்டியுள்ளது.