பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியோடு நடிகர் கமல்ஹாசன் விலக முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசன் நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றி பெற்றதால் தற்போது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மக்களிடையே புகழ் பெறுவதோடு, சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைப்பதால் பலரும் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர்.
பிக்பாஸ் முதல் சீசன் முதல் 3வது சீசன் வரை நடிகர் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே நேரம் இந்த சீசனோடு கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே, பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியை சூர்யா அல்லது அரவிந்த் சாமி இருவரில் யாரேனும் ஒருவர் நடத்துவார்கள் எனக்கூறப்படுகிறது.