Entertainment
கமல் சாருடன் படம் செய்ய உள்ளேன் – ரஞ்சித்
சினிமாவில் திடீரென வேகமாக வளர்ந்த இயக்குனர் பா.ரஞ்சித். ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் போன்ற பெரிய இயக்குனர்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை இவர் பெற்றதால் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து உள்ள இயக்குனராக இவர் பெயர் பெற்றார்.
இந்த நிலையில் கமல்ஹாசனை சில மாதங்களுக்கு முன் சந்தித்து பேசினார் .அப்போது இருவரும் இணைந்து படம் செய்ய இருப்பதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் விக்ரம் பட ஆடியோ வெளியீட்டின்போது ரஞ்சித் பேசி இருப்பதாவது, கமல் சாரின் படங்களில் அவர் நடித்து இயக்கிய விருமாண்டி படம் எனக்கு பிடித்த படம். அது போல ஸ்டைல் கதைகள் எனக்கு பிடிக்கும்.
அது போலவே மதுரை ஸ்டைலில் மதுரையை கதைக்களமாக கொண்டு ஒரு கமல் சார் படத்தை இயக்க வேண்டும் என பா. ரஞ்சித் கூறியுள்ளார்.
