Entertainment
கமலுக்கு கொரோனா- ரசிகர்கள் கோவிலில் வேண்டுதல்
நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் அமெரிக்க சென்றார். இரு தினங்களுக்கு முன் அவர் நாடு திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. அவர் தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தான் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் கொரோனா இன்னும் போகவில்லை அனைவரும் கவனமாக இருக்க கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் கமலுக்கு பூரண நலம் கிடைக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் இறைவழிபாடு செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர மக்கள் நீதி மய்யம் சார்பில் அங்குள்ள சக்தி விநாயகர் கோவிலில் கமல் குணமடைய வழிபாடு நடைபெற்றது.
கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும், #மக்கள்நீதிமய்யம் தலைவர்@ikamalhaasan பூரண நலம் பெற வேண்டி,
மேட்டுப்பாளையம் நகர சார்பில், மநீம
மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர்
அ.#ரசூல்கான் தலைமையில்,
6.30 pm மணியளவில் ,
ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது! pic.twitter.com/I7VSTjx9Pm— Sankarganesh_Lovepeace🇮🇳MNM (@SankarganeshLo1) November 23, 2021
